எதிர் கால கனவுகளுடனும் சுமைகளுடனும் இருந்த
சின்னஞ்சிறு சிட்டுகளை சிங்களப் படை சிதைத்த நாள் !
சிங்கள இனவெறியனுக்கு சின்னஞ்சிறு தளிர்களும் எதிரியாச்சு !
அந்த அதிகாலையில் பிஞ்சுகள் தம்மும் உடன் இருந்த
உறவுகளுடன் வட்டமிட்டு உல்லாசக இருந்த வேளையில்
சிங்கள இனவெறியனின் கழுகு விமானங்கள் எங்களின்
செந்தளிர்களை கொத்தோடு பறித்துச் சென்ற கோரசம்பவம்
2006 ஆவணி 14 ஆம் நாள் !
இனவெறி அரசின் கொடூர தாக்குதல்களின் போதும்
மற்றய சம்வங்களிலும் தமது அனைத்து
அன்புகள், பாசங்கள், அரவணைப்புகள், பாதுகாப்புகள்
அணைத்தையும் இழந்த போது !
இவர்களை ஆற்றல் மிக்கவர்களாக வளர்த்தெடுப்பற்க்கா
எமது தேசிய தலைவரின் சிந்தனையில்
உருவாகியது தான் இந்த செஞ்சோலை !
எம் மண்ணிற்க்கு கிடைக்கவிருந்த இந்த அரும்பு மொட்டுகளை
சிங்கள இனவெறியன் கிள்ளி எறிந்து எரித்தன் !
இந்த குருதியில் உறைந்த கொடிய நாள்
இந்த உலகின் மனிதமும் தொலைந்த நாள் !
ஈழ மக்களின் மானங்களிலும் புலம்பெயர் தமிழ் மக்களின்
உள்ளங்களிலும் கொடிய நினைவுகளை சுமந்த நாள் இன்று !
„ இழி நிலை வரினும் ஈழ விடுதலையை விலை பேசாது
விடுதலையின் குரலாய் விடுதலைக்கா குரல் எழுப்புவோம்
அனைவரும் ஓர் அணியில் இணைவோம்
Saturday, November 5, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment