இதமான உன்
வார்த்தைகளுக்குள் நான்
தொலைந்து போன காலங்களை
சற்று திரும்பி பார்க்கையில்
சட்டென்று சிறு பனித்துளிகள்
என் இதயத்திலே விழுகிறது
தொலை தூர பயணம் அதில்
தொலையாத உறவாக வந்த நீ
இன்று எங்கே தொலைந்து சென்றாய்
உன் கண் சிமிட்டலுக்குள்
சிக்கிய என் இதயம் இன்று நீ
இல்லாத நொடிகளுக்குள்
எரியுதடி பெண்ணே!
0 comments:
Post a Comment