விதைக்குள் இருந்து வந்த விருட்சம் நங்கள்
வேருன்றி நின்றவர்கள் எம் தேசத்தில்
வந்தவரை வாழவைத்த தமிழினம் நாங்கள்
வல்லாதிக்கத்தின் பிடியில் வறண்டு கிடந்ததோம்
வாழ வந்தவன் பிடியில் வாடியும் கிடந்தோம்
வஞ்சனை கொண்டவன் சித்திரவதையும் செய்தான்
சிறையிலும் அடைத்தான் தாங்கி கொண்டோம்
கல்வியை இழக்க சொன்னான்
முடியாது என்றோம்
காமத்துக்கு அடிபணிய சொன்னான்
முடியாது என்றோம்
கலாச்சாரத்தை சீர்குலைக்க சொன்னான்
முடியாது என்று முழுசாக கூறினோம்.
நீதி இழந்து நேர்மை இழந்து
நடுத்தெருவில் எம் இனம் வர
காரணமின்றி வரைந்தான் பலகதைகள்
பாவியான எங்களை பலிகடாக்க
பதறி எழுந்தான் தமிழ் இன காவலன்
தவிக்கும் எங்களை மீட்க
தமிழனின் வீரத்தை அறிந்த
துரோகி அயலவனும் வந்தான்
உங்களை மீட்கிறோம் என்று
சதிகள் பல செய்து வந்தவனை
எல்லாம் கூட்டு சேர்த்து
வல்லாதிக்கத்தின் துணையோட
துடைத்தெறிய நினைத்தான்
தமிழ் இன காவலர்களோடு தமிழையும்
உரிமைக்காக அனைத்தையும்
இழந்தவர்கள் நாங்கள் உலகை
நீ கூட்டினாலும் பயந்து போக
காற்றில் பறக்கும் பதரில்லை
நங்கள் இரும்பையும் துரும்பென
எண்ணும் இதயம் கொண்டவர்கள்
அஞ்ச மாட்டோம் என்று
அயலவனுக்கும் அடித்து கூறினோம்
கேட்க நாதியில்லை என்று
நாச வேலைகள் செய்து அழிக்க
முடிவெடுத்தான் எங்களை
கேள்வி கேட்டவர்களை எல்லாம்
விச வாயு தாக்கி அழித்தான்
எஞ்சியவர்களை நாள் தோறும் கொன்றான்
முட்கம்பி வேலிக்குள்ளும் அடைத்தான்
மூச்சி திணறும் சிறைகளுக்குள்ளும் அடைத்தான்
சிறகுகள் உடைந்தும் சிதறி நாங்கள் ஓடவில்லை
சிந்தனை கலைந்திடவுமில்லை
தன் மானம் காக்க இன் உயிரை
தியாகம் செய்யும் தமிழர் நாங்கள்
உரிமைக்காக உயிரையும் கொடுக்கும்
உன்னதப் பிறவிகள் நாங்கள் விழிமூடும் வரை
விலக்க மாட்டோம் விடுதலை கனவை
ஆத்திரம் கொண்டபின் அச்சம் எமக்கில்லை
கொள்கை கொண்டபின் கோழை நாங்களில்லை
குலை குலையாய் விழ்ந்தாலும்
உருக்குலையாது எம் கனவு
விழ்ந்தது எம் ஒரு படி உயர்வுதான்
உறுதியான மனமோ உணர்வோ அல்ல
பூட்டிய நம் நம்பிக்கை என்னும்
மனக்கதவை திறப்போம்
பூமியில் நமக்கும் ஒரு வாசல் திறந்திருக்கும்
புலம்பியது போதும் புறப்படுவோம்
புது மனவலிமையோடு புயலெனவே
இனிமேலும் இருக்காதீர்கள் சுயநல வாதிகளை நம்பி
துணிந்து எழுங்கள் துயரை விட்டு
ஒற்றுமையின் கீழ் நன்பனாய்,,,,,,
0 comments:
Post a Comment