இளைஞனே நீ இறைவனால்
உருவாக்கப்பட்ட கலைஞனே
உன் இதயத் துடிப்பு நம்
நாட்டின் வெற்றிப் படிப்பு
துணிந்து வா துவண்டு விடாதே
இமயமலையை இடித்துத் தள்
வங்கக்கடலை வடித்து விடு
வானத்தை சுருக்கி விடு
ஈழத்தை மீட்டெடு
ஆயுதம் ஏந்தி அழிந்தது போதும்
அஹிம்சை வழியில் சாதிப்போம் வா
தாவரம் செழிக்க தண்ணீர் வேண்டும்
தமிழினம் தழைக்க
தலைவர்களே நீங்கள் வேண்டும்
கந்தியாயினும் நேதாஜியாயினும்
சிந்திக்க வைத்தது இளமையே
நம் நாட்டின் தலைஎழுத்து
இளைஞனே உன் வரலாற்றுக் கையெழுத்து
தமிழ் ஈழம் மலர்வது இலங்கையில்
இளைஞனே அதுவும் உன் கையில்
Saturday, November 5, 2011
- Home /
- தமிழ் /
- இளைஞன் - கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment