மனிதம் புதைக்கப்பட்டதால் - இங்கு
ஒரு மாமிசம் புதைக்கப்படுகிறது
வயிற்றுப்பசி போக்க
வக்கத்துப்போன கைகள்
மன் பசி போக்கிட
தன் சிசுவை இறையாக்குகிறாள்
இத்தாயனவளின் தனயன்
தன்னை விட்டுப் பிரிவதை
ஏற்கமுடியாத கண்களும் இதயமும்
இம்மனிதநேயங்களின்
உள்ளங்களை உசுப்பவில்லையா
குழந்தையை குழியில் இட்ட கைகள்
மூடத்தழுவாத பாச உணர்வு
பதறியழும் மனது - என் நெஞ்சை
கூர்கொண்ட வால்கொண்டு கீறுது
உங்கள் உள்ளங்களை கீறவில்லையா..?
0 comments:
Post a Comment