பணம் பணம் பணம் என்று
பிணம் பிணம் பிணம் ஆக
புதைந்தவர்கள் எத்தனை எத்தனை பேர்
எரிந்தவர்கள் எத்தனை எத்தனை பேர்
பணம் என்ற மூன்றெழுத்துக்காக
உயிர் என்ற மூன்றெழுத்தை
பிணம் என்ற மூன்றெழுத்தாக்கியவர்கள்
மானிடன் என்ற நான்கெழுத்தவர்கள்
இந்த கொடிய பணத்திற்கா அரிய
உயிர்களை வதம் செய்து பிணமாக்கும்
பிணதின்னிகள் பல்கோடியாக பெருகி
பிணமாமிச தின்னிகளாக வாழ்கிறார்கள்
இந்த மானிடர்கள்
போகும் போது கொண்டு போகமுடியாத
இந்த பணத்திற்க்காக வாழும் உயிர்களை
கொடுமை செய்யும் கொடூரகாரர்கள் வாழும் இந்த
உலகம் பிணங்களை சுமந்து சுமை
தாங்கமுடியாமல் தள்ளாடுகின்றது
இந்த கொடிய பணத்தினால்.
wow excellent................
ReplyDeletethanks boss
Delete