Saturday, November 5, 2011

நான்....!! - கவிதை

9:57 AM

எனக்கு பசி தாகம் மோகம் 

உடனே உடனே 

ஒரேயடியாய் தீர்க்க 

ஓரிடம் வேண்டும் 

இரத்தம் சதை 

இன்னும்பிற 

என்பற்கள் நற நறக்க 



கண்கள் சிவசிக்க 

உடல்கொதி கொதிக்க 

வீதியில் இறங்கி 

விறு விறுவென 

நுழைந்தேன் 

யாழ் வைத்தியசாலை 

நாசிகள் கூட 

நாசம்பண்ணியதில்லையாமே 

நான்செய்துபார்த்தாலென்ன 

நுழைந்தேன் 

நேயாளிகள்வரிசையாய் 

நொய்ந்துபோய் சே 

நோய்தான் வந்துவிட்டதே 

இனி இருந்தென்ன 

இறந்தென்ன -என் 

இயந்திர துப்பாக்கி 

இயங்கியது 

ஓ....வென ஒரு ஓலம் 

ஓடிவந்தனர் தாதியர் 

வெள்ளையுடையில் 

என்மனதோ கறுப்பானது 

என்ன கவிஞர் 

எழுதி குவிக்கின்றனர் 

பெண்கள் முகத்தையும் 

மார்பகத்தையும் 

என்னைபோல் மெதுவாய் 

கத்திகொண்டு 

சிறிது சிறிதாய் 

மெல்ல மெல்ல 

கீறி குத்தி 

வழியும் குருதியை 

வாஞ்சையுடன் 

ரசித்து ருசித்து 

கையை உடைத்து 

காலை முறித்து 

கழுத்தையறுத்து- என் 

வீரத்தையும் 

மயங்கிகிடந்த 

மங்கையர்மீது-என் 

வீரியத்தையும் 

மீண்டும் மீண்டும் 

மீழ்பரிசீலனை 

செய்துகொண்டெழுந்தபோது 

எங்கேயோ ஓரு 

குழந்தையின் 

குவா குவா 

கூக்குரல்.... 

குழந்தையொன்று 

குறைகூறுவதா-என்வீரத்தை 

செல்லமாய்தூக்கி 

சுற்றி 

சுவரில்ஓரடி 

சுவரெங்கும்சித்திரமாய் 

இரத்தம் 

எதிரே இன்னும்சிலர் 

இறைவனுக்கடுத்ததாய் 

எல்லோரும் 

இவர்களைத்தான் 

வணங்குவார்களாமே?? 

பாவம் 

பைத்தியகார வைத்தியர்கள் 

எல்லேரும் என்னை வணங்கியபடி 

வெடிகுண்டொன்றை வீசி 

ஆசீர்வதித்துவிட்டு 

வெளியேவந்து 

ஆசுவாசமாய் 

பீடி ஒன்றை உருவி 

பற்றவைத்து 

புகையை 

இழுத்துவிட்டேன் 

இந்த தேசத்துமக்களின் 

ஓலங்களைபோலவே 

பீடி புகையும் 

காற்றில் கரைந்து 

காணாமல்போனது 

இப்போ 

புரிந்திருக்கும்உங்களிற்கு 

நான் யாரென்று 

காந்தி தேசத்தின் 

காவலன் 

ஜெய் கிந்...................

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:

Post a Comment

 

© 2013 Crack Software & Game. All rights resevered. Designed by Templateism

Back To Top