Sunday, April 7, 2013
- Home /
- தமிழ் /
- Constipation Problem & Simplest Solution In Tamil - மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கான எளிய இயற்கை வழிமுறைகள்
Constipation Problem & Simplest Solution In Tamil - மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு கான எளிய இயற்கை வழிமுறைகள்
10:14 AM
இன்றைய காலத்தில் ஆரோக்கியமற்ற உணவுகளின்
காரணமாக பலர் மலச்சிக்கல் பிரச்சனைக்கு ஆளாகின்றனர். சில நேரங்களில் அந்த
மலச்சிக்கல் முற்றிய நிலையில் கடுமையான வயிற்று வலியுடனோ அல்லது இரத்தப்
போக்கோ ஏற்படும். இவ்வாறு இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இந்த
பிரச்சனை
குழந்தைகளுக்கு வந்தால், அவர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாவார்கள்.
இவை அனைத்திற்கும் முக்கிய காரணம் உண்ணும் உணவு தான். ஏனெனில் உண்ணும்
உணவில் குறைவான அளவில் நார்ச்சத்து இருந்தால், அவை குடலியக்கத்தை
பாதிக்கும், பின் உடலில் இருக்கும் கழிவுகள் சரியாக வெளியேறாமல், உடலிலேயே
தங்கி எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமலிருக்குமாறு செய்யும்.
இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்றால் அது நார்ச்சத்துள்ள உணவுகள் தான்.
இந்த சத்துள்ள உணவுகள் குடலின் இயக்கத்தை அதிகரித்து, உடலில் இருக்கும்
கழிவுகளை சரியாக வெளியேற்றிவிடும். ஆகவே இந்த உணவுகளை அதிகம் உணவில்
சேர்த்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யலாம்.
ஆப்பிள், பிளம்ஸ் மற்றும் பேரிக்காய்
மலச்சிக்கலானது பொதுவாக வயிறு உப்புசத்துடன் இருந்தால் ஏற்படுவது. இதற்கு
பழங்களில் ஆப்பிள், பிளம்ஸ் மற்றும் பேரிக்காயை சாப்பிட்டால், அவற்றில்
உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கல் உண்டாகாமல் தடுக்கும்.
பாப்கார்ன்
பாப்கார்னில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன், நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
மலச்சிக்கல் ஏற்படுவதற்கு நார்ச்சத்துக் குறைபாடும் ஒரு காரணம். ஆகவே
ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போது, மற்ற பிட்சா, சாண்ட்விச்
போன்றவற்றை சாப்பிடுவதற்கு பதிலாக, பாப்கார்னை சாப்பிட்டால், மலச்சிக்கலை
தவிர்க்கலாம்.
பீன்ஸ்
காய்கறிகளில் கிடைக்கும்
நார்ச்சத்துக்களை விட, பீன்ஸில் இரண்டு மடங்கு அதிகமாக நார்ச்சத்து உள்ளது.
ஆகவே இதனை அதிக அளவில் உணவில் சேர்த்து வந்தால், குடலியக்கம் நன்கு
செயல்பட்டு, மலச்சிக்கல் ஏற்படாது தடுக்கலாம்.
உலர் பழங்கள்
பழங்களை விட உலர் பழங்களில் அதிக சத்துக்கள் உள்ளன. அதிலும் உலர்ந்த
திராட்சை, பேரிச்சை, ஆப்ரிக்காட் போன்றவற்றில் நார்ச்சத்துக்கள்
மட்டுமின்றி, சோர்பிட்டால் என்னும் கார்போஹைட்ரேட்டும் உள்ளது. இது
பொருளானது உணவுப் பொருட்கள் செரிமானமடையும் போது உண்டாகும் திரவத்தை,
குடலின் வழியாக வெளியேறும் மலத்தை லேசாக்கி, எளிதாக வெளியேற்ற உதவுகிறது.
தானியங்கள்
அனைவருக்குமே தானியங்களில் கொழுப்புக்கள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள்
அதிகமாகவும் உள்ளன என்பது தெரியும். ஆகவே இந்த பொருட்களை உணவில் சேர்ப்பது
நல்லது. அதிலும் கோதுமையால் ஆன சப்பாத்தியை சாப்பிட்டால், மலச்சிக்கல்
உண்டாகாமல் இருக்கும்.
ப்ராக்கோலி
நார்ச்சத்தின் சூப்பர்
ஸ்டார் என்றால் அது ப்ராக்கோலி எனலாம். ஏனெனில் இதில் அந்த அளவில்
நார்ச்சத்தானது நிறைந்துள்ளது. ஆகவே இதனை வாரத்திற்கு இரண்டு முறை சமைத்து
சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்க முடியும்.
பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்களான ராஸ்ப்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி போன்றவற்றில்
அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் அரைக் கப்
ஸ்ட்ராபெர்ரியில் 2 கிராமும், ப்ளாக்பெர்ரியில் 3.8 கிராமும்,
ராஸ்ப்பெர்ரியில் 4 கிராம் நார்ச்சத்தும் அடங்கியுள்ளன. மேலும் கலோரிகளும்
குறைவாக உள்ளன. ஆகவே இவற்றை சாப்பிட்டால், குடலியக்கம் நன்கு இயங்கி,
மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.
நட்ஸ்
நார்ச்சத்து
அதிகம் உள்ள உணவுப் பொருட்களில் நட்ஸ் வகைகளும் ஒன்று. ஆகவே நொறுக்கு தீனி
சாப்பிடுவதற்கு பதிலாக, இதனை தேர்ந்தெடுத்து சாப்பிட்டால், வயிற்றில்
உண்டாகும் உப்புசம் நீங்கி, மலச்சிக்கலை தடுக்கலாம்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட்டால், 3.8 கிராம் நார்ச்சத்தை பெறலாம்.
அதிலும் இனிப்பு உருளைக்கிழங்கை தோலோடு சாப்பிட்டால், 4.8 கிராம்
நார்ச்சத்தானது உடலுக்கு கிடைக்கும். ஆகவே உருளைக்கிழங்கை சாப்பிடும் போது
தோலை நீக்காமல், வேக வைத்து, மசித்து, ஒரு பொரியல் போன்று செய்து
சாப்பிட்டால், மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment