Sunday, March 31, 2013

ஒசாமா பின்லேடன் கொல்லப்படும் நேரடி வீடியோ காட்சி என்ற பெயரில் வைரஸ்

2:56 AM

Osama bin Laden Killed (LIVE VIDEO)  என்ற பெயரில் புதிதாக ஒரு வைரஸ் இணையதளத்தில் வேகமாக உலாவருகிறது இதைப்பற்றிய ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்.



பேஸ்புக் மற்றும்

டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களில் இன்று அதிகமாக உலாவரும் சேதி என்னவென்றால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட நேரடிக்காட்சிகளைக் கொண்ட வீடியோவைப்பார்க்க இங்கே சொடுக்குங்குள். இதில் பலதரப்பட்ட மக்கள் எப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் சொடுக்கியவுடன் அவர்கள் கணினியை வைரஸ் பதம் பார்த்துவிடுகிறது இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னவென்று பார்க்கலாம்.





உங்களுக்கு இமெயில் அல்லது பேஸ்புக் அல்லது டிவிட்டர் போன்ற சோசியல் தளங்களில் இருந்து படம் 1-ல் மேலே காட்டியபடி ஒரு வீடியோ காட்டப்படும் அதில் ஒசாமா பின்லேடன் கொல்லப்படும் நேரடி வீடியோ காட்சியை யூடியுப் ஒளிபரப்ப அனுமதி கொடுக்காத காரணத்தால் இங்கு கொடுக்கப்படிருக்கும் முகவரியை சொடுக்கி அந்த வீடியோவை பாருங்கள் என்று இருக்கும் உடன் கொடுக்கப் பட்டிருக்கும் இணையதள முகவரியை எக்காரணம் கொண்டும்

 சொடுக்க வேண்டாம். நாம் எதையும் தரவிரக்காமல் எப்படி நம் கணினியை வைரஸ் தாக்கும் என்றெல்லாம் அறிவுப்பூர்வமாக யோசிப்பதற்குள் உங்கள் கணினி வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும்.



 அதாவது நாம் உலாவியில் பார்க்கும் இணையதளங்கள் கணினியில் தற்காலிகமாக (Temporary) ஆக சேமிக்கப்பட்டு தான் நமக்கு காட்டப்படும் இந்த வைரஸ் தன் பணியை உலாவி Temporary ஆக சேமிக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கூகிஸ் மூலம் நண்பர்களின் இமெயில் முகவரியை எடுத்து அவர்களுக்கும் அனுப்பிவிடுகிறது. முன்னனி ஆண்டிவைரஸ் நிறுவனங்கள் கூட விழிபிதுங்கி இருக்கிறது. இதுபோல் ஒசாமா பெயரில் வரும் எந்த இணைப்பையும் (Link) சொடுக்காமல் இருப்பது தான் பிரச்சினை வராமல் தடுக்க ஒரே வழி. உங்கள் நண்பர்களுக்கும் இந்தப்பதிவை கொண்டு செல்லுங்கள்.

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:

Post a Comment

 

© 2013 Crack Software & Game. All rights resevered. Designed by Templateism

Back To Top