Saturday, November 5, 2011

தொலைக் காட்சியின் பாதாளத்தில் விழும் சிறார்களை மீட்கும் வழி என்ன ?

8:16 AM

 எந்த ஒரு கல்வி நிறுவனமும் செய்யாத சிறந்ந செயல்கலைச் சீரமைத்துத்தரும் பயிற்சிக் கூடமாக விளங்குவது ஒரு குழந்தையின் இல்லம்மட்டுமேயாகும்.

உலகில் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல்பெட்டிப்பாம்பாக மாறி தொலைக்காட்சி உட்பட அனைத்தையும் மூட்டை கட்டிவைத்து விட்டு கல்வியை மட்டுமே போதிக்க வேண்டுமே போதிக்க வேண்டும்என நாம் பரிந்துரைக்க வில்லை. தொலைக்காற்சிகளின் தீமைகளைஎடுத்துரைக்கும் அதே வேளையில் அவை ஏற்படுத்தும் நன்மைகளையும்இழந்து விடாமல் இருக்க தொலைக்காற்சியினால் அடிமைப்படும்மனதைக்கட்டுப்படுத்தும் வழிகளையே இங்கு முன்வைக்கிறது. எனவேஇதற்கு முறைப்படுத்தப்பட்ட சீரமைப்புள்ள திட்டம் தேவைப்படுகிறது.

பெற்றோர்கள் செய்யவேண்டியது என்ன? 

குழந்தை வழர்ப்பில் முழுப்பொருப்பாளிகளான பெற்றோரே இந்தச் சீரமைப்பைசெய்ய வல்லவர்கள் தங்கள் பிள்ளைகளின் காலை கண் விழிப்பு முதல் இரவுஉறங்கும் வரையிலான அனைத்து அசைவுகளையும் நேரடியாகக்கண்கானிப்பதோடு பெற்றோர் குழந்தையின் தொலைக்காட்சி பார்க்கும்நேரத்தை துல்லியமாகக் கணக்கிடவேண்டும். அத்துடன் குழந்தைகள்பார்க்கும் நிகழ்சிகள் அவை ஏற்படுத்தும் பாதிப்புகள் ஆகிய அனைத்தையும்சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

ஒரு குழந்தை தொலைக்காட்சிக்கு முன் அமரும் நேரத்துக்குச் சற்றும்குறையாமல் தன் குடும்பம் , நண்பர்கள், சமூகஉடற்பயிற்சிகள், விளையாட்டு, நல்ல நூல்கள் வாசித்தல், பொது அறிவு, கூட்டுத் தொழுகைகள், இஸ்லாமியஅறிவுப்போட்டிகளில் கலந்து கொள்ளல், போன்றவற்றிலும் நேரத்தைசெலவளிக்கும்படி அறிவுருத்துவது அவசியமாகும்.

குழந்தைகளுடனான பரஸ்பர உரையாடல் மிகவும் பயனளிக்கும். ஆங்கிலத்தில் இதனை not to them but with them என்பார்கள் அதாவது அவர்களதுமுகம் பார்த்து முக்கியத்துவம் தந்து உறையாடும் பேச்சுக்களினால்குழந்தைகளுக்கு பெற்றோர் மீது ஒரு விதமான ஈர்ப்பு ஏற்படுகின்றதுஇந்தவகை ஈர்பு தரும் சுவையினால் குழந்தைகள் தொலைக்காட்சியின்வீனான நிகழ்ச்சிகள் ஏற்படுத்தும் மாற்று களியாட்ட வழிகளை தவிர்க்கும். 

குழந்தைகளை அடிக்கடி ஆர்வமூட்டும் செயல்களில் ஈடுபடுத்துதல் நலன்சேர்க்கும். குறிப்பாக அவர்களின் எண்ணங்கள், கருத்துக்களுக்குமதிப்பளித்தல். அவை பயனற்றதாக இருந்தாலும் கூட இத்தகய செயல்கள்குழந்தைகளின் சிந்திக்கும் திறனை வளர்க்கும்.


உலகில்
 அவர்களுக்கு நடக்கும் எந்தஒரு செய்கைகளாக இருந்தாலும்அதன் தர்க்க முறையிலானவிளக்கத்தையும் அவர்களுக்குதெறிவிக்க வேண்டும். இது அவர்களின்படைப்புத் திரனுக்கு ஊக்குவிப்பதாகஅமையும். சிறந்த நல்ல புத்தகங்களைவாசிப்பதை ஒரு வேடிக்கையாகஆக்குதல் மிகுந்த பலன் விளைவிக்கும்நுல்களின் முக்கியத்துவத்தினை அவர்களுக்குப் புறியும் வகையில்எடுத்துறைப்பது மிகவும் சிறந்தது

பெரியவர்கள் சொல்வதை குழந்தைகள் கவனிக்க வேண்டும் என்று முரட்டுத்தனமான அழுத்தத்தை அவர்கள் மீது பிரயோகிக்காமல் அவர்கள்சொல்லுபவற்றை பெறியவர்கள், பெற்றோர்கள் கேட்கப் பழகுங்கள் அப்போதுமென்மையான முறையில் அணுகினால் எதையும் சாதிக்கலாம்.

செய்கை உலகத்தில் மனதளவில் ஒரு சிறாரை வசிக்க வைக்கும்தொலைக்காட்சிக் குப்பைகளை விட்டு ஒதுங்கி குழந்தைகளில் முதல்உலகமான பெற்றோர்களைச்சுற்றி வலம் வரவைக்கும் மாயா ஜாலங்கள்நிச்சயமாக பெற்றோர்களிடம்தான் உள்ளது.

தரமான நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தம்மைச் சுற்றி நடக்கும்நிகழ்வுகளையும் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி அவர்களுக்கு விழிப்புணர்வுஊட்டும் அதே வேளையில் தீங்குகளிலிருந்து தமது இளையதலைமுறையினரை மீட்டி நேர்வழிப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின்கடமையாகும்.
 

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:

Post a Comment

 

© 2013 Crack Software & Game. All rights resevered. Designed by Templateism

Back To Top