Saturday, November 5, 2011

இஸ்லாத்தின் பார்வையில் காதலர் தினம்

7:48 AM

இளசுகளின் மனம் மறந்தவிடாது அலைபாயும் ஒரு தினம் என்றால் பெப்ரவரி 14ம் திகதி காதலர் தினம்! பெப்ரவரி மாதத்தை பொறுத்தவரை எமது நாட்டுக்கு முக்கியமான ஒரு மாதம். சுமார் ஒரு நூற்றாண்டு காலம் கிறிஸ்தவ ஆங்கியர்களுக்கு அடிமைப் பட்டு கிடந்து சுதந்திரம் அடைந்த மாதம். பெப்பரவரி 4ம் திகதி எமது நாடு (இலங்கை) விடுதலைப் பெற்ற தினம்! இத்தினம் பற்றி பள்ளிப் பருவ மாணவர்கள் முதல் பல்லுப் போன வயோதிபர்கள் வரை அறிந்து வைத்திருக்க வேண்டிய தினம்! ஆனால் இன்று யாரும் அத்தினம் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை.





எல்லோரும் பெப்ரவரி 14ம் திகதியைத் தான் மனமகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். வாலிபர்கள், வயோதிபர்கள், தம்பதிகள் என்று பலரும் பூச்செண்டு, பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்து தெரிவிக்கிறார்கள். விஷேடமாக இளம் வாலிபர்கள் தங்களுடைய காதலை புனிதப் படுத்தக் கூடியதாக அத்தினத்தை பூஜிக்கிறார்கள் தனது பிறந்த நாளை மறந்துவிட்டாலும், ‘காதலர் தினத்தை’ மறந்தவிட முடியாத நிலையில் இத்தினம் பிரசித்தம் பெற்றுவிட்டது. சர்வதேச ரீதியாக பலதினங்கள் விஷேட தினங்களாக கொண்டாடப்படுகிறன.



- போதை ஒழிப்புத் தினம்



- சிறுவர், முதியோர் தினம்



- சூழல் பாதுகாப்புத் தினம்



- சேமிப்புத் தினம்



- மகளிர் தினம்



- அன்னையர் தினம்



- தொழிலாளர் தினம்



இத்தினங்கள் பற்றிய அறிவும் ஆர்வமும் காணக்கிடைப்பது அரிது. ”காதலர் தினம்” மேற்கத்திய உலகில் சீரழிந்து போன கலாசாரத்தின் சிந்தனையால் உருவான தினம்! இரவு பணிரெண்டு மணிக்கு காதலர்கள் ஒன்று கூடி முத்தமிடுவதும் பூச்செண்டுகளை பறிமாறுவதும் பரிசில்களை கொடுப்பதும் உல்லாசமாக ஊர்சுற்றுவதும் தனித்து நின்று உறவுகொள்வதும் மிகப்பெரிய நாகரீகம்.



நாளொருவன்னம், பொழுதொரு மேனியாக ஆண் பெண் உறவு (காதலர் காதலி உறவு) மாறிக்கொண்டேயிருக்கும். ”ஒருவனுக்கு ஒருத்தி” என்ற நிலை மாறி ”ஒருவருக்கும், ஒருத்திக்கும் பலபேர்” என்று சாதாரணமாகிவிட்டது. அதனை பிரதிபலித்துக் காட்டுவதுதான் மேற்கத்திய உலகின் ‘காதலர் தினம்”! கற்பு, கன்னித்தன்மை பற்றி அங்கே யாரும் அலட்டிக் கொள்வதில்லை. பரஸ்பரம் உடம்புகளை பரிமாறிக் கொள்வதில், கண்டவர் உடன் கூடிக் கொள்வதில் அலாதியான திருப்தி அவர்களுக்கு!



இளம்பெண்களின் உடைகளை உரித்தெடுத்து பவனிவரவிடுவதும் அதற்கு புள்ளிகள் போட்டு கிரீடம் சூட்டுவதும் அவர்களுடைய பொழுதுபோக்கு! அழகு ராணி எனும் பெயரில் பெண்களின் அங்கங்களை அலந்துபார்த்து ரசிப்பதும் ருசிப்பதும் அவரக்களுடைய கௌரவமான பொழுதுபோக்கு! பெண்ணின் கற்பை மயக்கமருந்தாக உட்கொள்வதற்கான அத்தனை வாய்ப்புக்களையும் வழிகளையும் தாராளமாக ஏற்படுத்தி கொள்கிறார்கள். அதற்காகவே பல தினங்களை பல சந்தர்ப்பங்களை ஏற்டுத்துகிறார்கள்..



அமெரிக்க பாடகி மடோனா கூறும் போது ‘என்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்ட அமெரிக்கா வீ.ஐ.பி.க்களின் பட்டியலை நான் எடுத்து விட்டால் அவர்களுடைய ”பெரிய மனிதர் இமேஜ் அத்தோடு காலி” என்றாள். மேலை நாட்டுகளில் பிள்ளைகளுக்கு தாய் சொல்லும் அட்வைஸ், மகளே! யாரோடு கூடினாலும் கருத்தடை உறையை பாவிக்க மற்ந்திடாதே! என்பது தான். கற்பை இழந்தாலும் கர்ப்பத்தோடு வராதே என்பது தார்மீக மந்திரம்!



பாடசாலை செல்லும் பிள்ளைகளும் தொழிலுக்கு செல்லும் பெண்களும் தங்களது பைகளில் (Bags) களில் கருத்தடை மாத்திரை, கருத்தடை உறை வைத்துக் கொள்ள மறந்திடமாட்டார்கள்.



திருமணத்திற்கு முன் கன்னித் தன்மை இழத்தல் கர்ப்பம் தரித்தல் கர்ப்பத்தை கலைத்தல் ஏன் குழந்தையை பெற்றெடுத்தல் எல்லாம் சர்வ சாதாரணமான விடயம். பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அப்பன் பெயர் தெரியாத குழந்தைகளும் அம்மா பாசம் இல்லாத பிள்ளைகளும் நாளுக்கு நாள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.



இவர்களது ”உல்லாசபுரியை” தான் காதலர் தினமாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.



மீடியாக்களாலும் ஜனரஞ்சக தினமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. சீரழிந்துபோன ஒரு சமூகத்தின் நாற்றம் வீசும் கலாசாரத்தின் நாகரீகப் பெயர் காதலர் தினம். நாறிப்போன இந்த அனாச்சாரம் கீழத்தேய நாடுகளில் அரங்கேற்றப்படுகிறது. நாகரீகத்தை புரிந்து கொண்டவர்களால் நாற்றம் வீசும் அம்சங்களை புரிந்து கொள்ள முடியாமல் போயுள்ளது. ”நட்பு தூய்மையானது ஆண் பெண் உறவு புனிதமானது அதனை கொச்சைப் படுத்தக் கூடாது” என்று அழகிய வார்த்தையில் காதல் பற்றி பேசலாம், கதைக்கலாம், வாதிக்கலாம். ஆனால் நடை முறையில் அது உண்மையல்ல என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது. காதலித்து கைவிடப்பட்ட எத்தனையோ அபலை பெண்களை பார்க்கிறோம். கற்பை சூரையாடி குதூகலிக்கும் எத்தனையோ கயவர்களையும் காண்கிறோம். ஏமாற்றப்பட்டுவிட்டோம் என கதறிஅழும் கன்னியர்களையும் கண்டிருக்கிறோம். மானம் போய்விட்டதே என்று தற்கொலை செய்துக்கொள்ளும் அப்பாவி பெண்களையும் அன்றாடம் கேள்விப்படுகிறோம். மகள் ஓடிப்போய்விட்டாளே என்று உயிரைமாய்த்து கொள்ளும் பெற்றோரையும் பாரக்கிறோம். கருவை கலைக்கச் சென்று மரணித்து போன பெண்களின் செய்திகளையும் படித்திருக்கிறோம்.



காதலியுடன தனித்திருந்து சல்லாபித்த காட்சிகளை மறைமுகமாக புகை படம் எடுத்து வீடியோ பண்ணி ‘பிளக்மையில்’ பண்ணும் காதலன்; அதனை இன்டர்நெட்டுக்கு விட்டு பணம் பறித்து -சம்பாதிக்கும்-விடயத்தையும் பாரக்கிறோம். காதலாலும் அதன் புனித தினத்தினாலும் உருவான விபரீதங்கள்தானே இவைகள்.



ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திப்பது, ஊர் சுற்றுவது, உலா வருவது என்பதுதான் காதல் என்றால் அதற்காகத்தான் காதலர் தினம் என்றால் அப்படிப்பட்ட தினத்தை இஸ்லாம் கண்டிக்கிறது.



உலகம்தோன்றிய காலம் முதல் இன்று வரை பெண்ணின் கற்பைப் பற்றித் தான் இச்சமூகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. கற்புக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் ஏதாவது செயற்பாடுகள், அல்லது பேச்சுக்கள் இருந்தால் அது பெண்ணின் வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிவிடும். ”திருமணத்திற்கு முன்பு நீ ஒருவனுடன் ஊர் சுத்தியவள் தானே” என்று கணவன் மனைவியைப் பார்த்து கேட்டாலே போதும் அவளுடைய கற்பு கேள்விக்குரியாகி விடும் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும்.



கற்பு என்பது புனிதமானது. அது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொது வானது. இருவரும் கற்பை பாதுகாக்க வேண்டும் என இஸ்லாம் உத்தரவிடுகிறது. ”தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும். நபியே! விசுவாசிகளான ஆண்களுக்கு நீர் கூறுவீராக!”



”தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளுமாறும், தங்களது கற்பை பேணிக்கொள்ளுமாறும். நபியே! விசுவாசிகளான பெண்களுக்கும் நீர் கூறுவீராக! (அல்குர்ஆன் 24:30-31) பெண்கள் இருக்கும் இடத்திற்கு நீங்கள் செல்வதை பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது ஒரு நபித்தோழர் கணவனின் நெருங்கிய உறவினர் அப்பெண்ணிடம் செல்லலாமா என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் கணவரின் நெருங்கிய உறவினர் மரணத்தைப் போன்றவர் என்று கூறினார்கள். அறிவிப்பவர் உக்பத் இப்னு ஹாமிர் (நூல்: புகாரி முஸ்லிம்) உங்களில் ஒருவர் ஓர் அந்நியப் பெண்ணிடம் அவளுடைய (தந்தை, சகோதரன், மகன்) போன்ற மஹ்ரமான உறவினர்கள் உடன் இருந்தாலே அன்றி தனியே இருக்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (நூல்: புகாரி முஸ்லிம்.)



சமூதாயக் கட்டுக்கோப்பை தகர்த் தெறியக் கூடிய அர்த்தமற்ற செயற்பாடுகளை இஸ்லாம் தடைசெய்கிறது. எச்சந்தர்ப்பத்திலும் அந்நிய ஆணும் அந்நிய பெண்ணும் தனிமையில் சந்திப்பது, பேசுவது, ஊர் சுற்றித் திரிவதைத் தடுக்கிறது. பெண்ணின் நன்மை கருதியே இஸ்லாம் இந்த தடையுத்தரவை பிறப்பிக்கின்றது. ஒரு பெண் தனக்கு விருப்பமான ஒரு கணவனையும், ஒரு ஆண் தனக்கு விருப்பமான மனைவியையும் தேர்ந்தெடுப்பதை இஸ்லாம் தடுக்கவில்லை. பிள்ளைகளின் விருப்பப் படிதான் மணம் முடித்து வைக்க வேண்டுமென இஸ்லாம் கட்டளையிடுகிறது. இதற்காக இவர்கள் வேலிதாண்டிப் போக வேண்டுமென்று இஸ்லாம் கூறவில்லை. அன்னியப் பெண்ணைப் பார்ப்பது, அவளைத் தொடுவது, அவளுடன் உட்காருவது விபச்சாரத்தின் பக்கம் கொண்டுப் போகக் கூடிய காரியமென கண்டிக்கிறது. விபரீதம் ஏற்பட முன்பு விளைவைப் பற்றி அறிவுறுத்துகிறது. அவசரத் தேவைகள் ஏற்பட்டாலும் ஆண் பெண் பேசக் கூடாது தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக் கூடாது எனக் கூறவில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் கற்புக்கு பங்கம் ஏற்படாதவாறு கண்ணியத்துடன் நடந்துகொள்ளுமாறு கட்டளையிடுகிறது. இதற்கு உதாரணமாக அல்குர்ஆன் அன்னை மர்யம் (அலை) அவர்களது வரலாற்றையும் மூஸா (அலை) அவர்களது வரலாற்றையும் சொல்லித்தருகிறது.



(மர்யம்) தன் ஜனங்களை விட்டும் ஒதுங்கி ஒரு திரையைப் போட்டு (மறைத்து) கொண்ட சமயத்தில் நம்முடைய தூதரை (ஜிப்ரீல் (அலை) அவரிடம் அனுப்பிவைத்தோம். அவர் சரியான மனிதருடைய தோற்றத்தில் காட்சியளித்தார். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று (மர்யம் ஜிப்ரீலை நோக்கி) கூறினார். (19:17-18)



மூஸா நபி மத்யன் வாசிகளான இரு பெண்களுக்கு நீர் இறைத்துக் கொடுத்து உதவி புரிந்தார். ”அது சமயம் அவ்விரு பெண்களில் ஒருத்தி மிக்க நாணத்தோடு அவர் முன் வந்து நீர் எங்களுக்கு தண்ணீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்கு கொடுக்கும் பொருட்டு என் தந்தை உம்மை அழைக்கிறார்” எனக் கூறினாள். (28:23-25)



எனவே இஸ்லாம் கூறும் ஆண் பெண் உறவு பற்றிய விளக்கம் மிகத் தெளிவானது, புனிதமானது. அதனைத் தாண்டிப் போகும் செயலை இஸ்லாம் தடை செய்கிறது.

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:

Post a Comment

 

© 2013 Crack Software & Game. All rights resevered. Designed by Templateism

Back To Top