Saturday, November 5, 2011

ஆர்த்மாத்தமான உயிருடன் - கவிதை

10:00 AM

எத்துணை வேசங்களால்

மறைந்தாலும் நாமனைவருமே

ஏங்கிக்கொண்டிருப்போம் நம்மையும்

ஆர்த்மாத்தமாய் நேசிக்கக்கூடிய

ஓருயிர் உலகில் இருக்கக்கூடும் என

ஆர்த்மாத்தமான ஓருயிர்

எனக்காய் உண்டென

உணர்கிறேன் நான்

உன்னை என்னவென்று சொல்வது

எண்ணும் போதெல்லாம்

வந்துவந்து போகிறாய் எதனால்

தோன்றும் போதே மறைந்து போகிறது
என்னையும் கவிகளையும்

அழகாக்கியவன் நீ

கவிகளினுள்ளேயுள்ள

உயிர்த்துடிப்பை உணர்த்தியவன் நீ
நான் படிகளில் தடுக்கிய

வேளைகளிலெல்லாம்

தானாக வந்து தாங்கியவன்

தவறானவற்றை மறுத்தவன்

நிறைவான போது

உயிரை மட்டும் நேசித்தவன்
உலகம் என்னை ஏசியபோது

என்னை ஏந்தியவன் அதே

உலகம் எனை ஏந்தியபோது

ஒதுங்கி நின்று ரசித்தவன்


ஆர்த்மாத்தமாய் ஒர் உயிர்

எனக்காகவும் உளது அது

நீயாய் அறிகிறேன் இறந்த பின்னும்
உன் ஒரேயொரு கண்ணிர்த் துளிபோதும்

எனக்கான ஆர்த்மாத்தமான ஆன்மாவாய்

என் கல்லறையிலும் உன்னை

உணர்வேன்  நேசிக்கும் உயிர் நீயென
உனக்கான ஆத்மாத்தமான

ஓருயிர் உலகில் இருக்குமா என

உனக்கு எப்போதாவது எண்ணத்தோன்றினால் 

நான் தானென உணர்த்த விரும்புகிறேன்.


Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 comments:

Post a Comment

 

© 2013 Crack Software & Game. All rights resevered. Designed by Templateism

Back To Top